Share on Social Media


மாநில மார்க்சிஸ்ட் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: கடன் தொல்லைக்கு ஆளாகி, நிலைமையை சமாளிக்க முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. எனவே, தமிழக அரசு இதில் தலையிட வேண்டும்.

கந்துவட்டி கொடுமைகள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கந்து வட்டி வாங்காதீர்கள்; வேண்டுமானால், கம்யூ., கட்சிக்கு வாருங்கள். நாங்கள் நிதியுதவி செய்கிறோம் என சொல்லாமல், அரசு தலையிட வேண்டும் என்கிறீர்களே… இது நியாயமா?
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி: ‘ஆதிதிராவிடர்’ என்ற அடையாளம் வேண்டாம் என்று தான், ‘தேவேந்திர குல வேளாளர்’ எனும் அடையாளத்துக்காக நாங்கள் போராடுகிறோம். இந்நிலையில், ‘ஆதிதிராவிடர் நலத் துறை’ என இருப்பது எப்படி நியாயமாகும்?
தேவேந்திரகுல வேளாளர் நலத்துறை என மாற்ற, தமிழக அரசு மறந்து விட்டதா அல்லது மறந்தது போல நடிக்கிறதா என தெரியவில்லை!
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை: அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், ஹிந்தி முழக்கத்தை, பாரதிதாசன் பல்கலை பயன்படுத்தியிருப்பது ஹிந்தித் திணிப்பு தான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?
ஒரு ஜாதிக்காக போராடி வந்த நீங்களும், உங்கள் கட்சியும், போணியாகாததால் கொள்கையை மாற்றிக் கொண்டீர்களா; அப்படியே, திராவிட கட்சிகள் போல, ஹிந்தித் திணிப்பு, அழகிய தமிழ் என மாறி விட்டீர்களே!

latest tamil news

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: குமரி மாவட்ட மலைகள் தகர்க்கப்பட்டு, கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கும், தி.மு.க., அரசு, நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்த உயரதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இது நியாயமா?
‘பத்தாண்டுகளாக காய்ந்து கிடந்த கட்சியினர் வாழ வேண்டாமா… நேர்மையான அதிகாரிகளை வளர்த்து விடக் கூடாது…’ என, தி.மு.க., அரசு நினைத்து விட்டதோ?
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை: சிலி நாட்டு ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் போரிக் முன்னணியில் உள்ளார் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளை தவிர, பிற தொகுதிகளில் கம்யூ.,க்கள் ஏன் தேறவில்லை என்பது விளங்குகிறதா… இவர்களுக்கு இந்தியாவை சீர்குலைக்கும் போராட்டங்களும், தென் அமெரிக்க நாடுகளின் அரசியலும் இரு கண்கள்!

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *