இப்படி, பல வகைகளிலும் உள்ளிழுக்கப்படும் நிக்கோட்டின், நுரையீரலை பாதிக்கும் என்றுதான் பரவலாக அறியப்படுகிறது. ஆனால், சிகரெட் புகை கண் முதல் குடல்வரை பாதிக்கக்கூடியது.
* புகைப்பழக்கத்தால் கண்களில் உள்ள Blindspot (இருட்டுப்புள்ளி) அதிகமாகின்றது.

* புகைப்பழக்கத்தால் விழித்திரையில் ரத்த ஓட்டம் குறைந்து அதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைத்திறன் குறைகின்றது.
* மிக முக்கியமாக நிறங்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். குறிப்பாக சிவப்பு நிறத்தை கண்டறிவதில் மிகவும் சிரமம் ஏற்படும். அது `நிறக்குருடு’ (Colour blindness) என்று அழைக்கப்படுகிறது.
* கண்களில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி ஆபத்தான பின்விளைவுகளை உண்டாக்குகின்றன.
* புகை நுரையீரலில் சிஓபிடி (COPD – chronic obstructive pulmonary disease), நுரையீரல் வீக்கம், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.