Share on Social Media


மதுரை-மதுரை வண்டியூர் தியாகராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தல்லாகுளத்திலுள்ள சம்பக்குளம் கண்மாய் 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் கொள்ளளவு குறைந்துவிட்டது. அருகில் நிலத்தடி நீர் மட்டம் பாதித்துள்ளது. கண்மாயை முறையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டியது பொதுப்பணித்துறையின் கடமை.ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை கலெக்டர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு கலெக்டர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *