Share on Social Media


கண்ணுக்கு தெரியாத வைரஸ், உலகத்தையே ஓராண்டாக முடக்கி வைத்துவிட்டது. அதற்கு வாரிசு வந்ததை போல, மரபணு மாறி, புதிய கொரோனா வைரஸ் உருவாகி, உலகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது.

மக்களை வீட்டிற்குள் மீண்டும் முடக்கி வைத்து, பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில், அரசும், ‘முக கவசம் அணியுங்கள்; சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்’ என, காது கிழிய கத்திக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், மக்கள் வழக்கம் போலவே, எதையும் காதில் வாங்காமல், முக கவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றனர். இப்படியே போனால், புத்தாண்டிலும், நாம் கொரோனாவின் கோர பிடியில் இருந்து விடுபட முடியாது என்பதை, மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். மக்களின் அலட்சியத்தை, சென்னை, குரோம்பேட்டையில் மட்டும் படம் பிடித்தது தான் இவை.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *