Share on Social Media


தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய மானிய கோரிக்கை மீது விவாதம்  நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் (அதிமுக) பேசியதாவது:
செல்போன் எண்கள் இருந்தாலே குற்றவாளிகளின் அனைத்து தகவல்களையும் கண்டுபிடிப்பதற்கான நவீன கருவிகள் வந்துள்ளது. போக்சோ வழக்கு பதிவு செய்ய தனி பிரிவு அமைக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடுக்கும், சட்டத்தை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த  தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். எரிபொருளுக்கான படி ரூ.370 ரூ.1700ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிகமானவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். காவலருக்கு என தனி மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பது போல 4 மாதம் முன்பு வரை உங்கள் ஆட்சிதான் இருந்தது. அப்போது செய்ய முடியாததை இப்போது சொல்லி கொண்டு இருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *