Share on Social Media


அபுதாபி: மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய நீர்வாழ் உயிரின காட்சி சாலை அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுறா மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் இந்த காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வனவிலங்கு காட்சி சாலைகளும், நீர்வாழ் உயிரின பூங்காக்களும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் அலாதியான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடியவை. அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய நீர்வாழ் உயிரின காட்சி சாலை அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த காட்சி சாலையில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிய வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் காட்சிக்கப்படுத்தப்பட்டுள்ளன.

ஏறத்தாழ கடலுக்கு நடுவே செல்வது போன்ற உணர்வை கொடுப்பதாக கூறும் பார்வையாளர்கள், வண்ணமயமான குட்டி, குட்டி மீன்கள் கண்களுக்கு விருந்து அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குட்டீஸ்களை கவர விமானம், கார் போன்ற வடிவங்களில் தொட்டி அமைத்து அதில் மீன்களை விட்டுள்ளனர். உலகின் மிக நீளமான ஊர்வனமாக கருதப்படும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்நேக், ஹேமர் ஹெட் சுறாக்கள், ஆசிய வாட்டர் மானிடர் பல்லி உள்ளிட்ட வித்யாசமான உயிரினங்களும் இங்கு உள்ளன.

காட்சிசாலைகளை பராமரிக்கவும், உயிரினத்தின் உடல்நலத்தை உறுதிப்படுத்தவும் 80 நீர்வாழ் உயிரின நிபுணர்கள் கொண்டு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த நீர்வாழ் உயிரின காட்சி சாலையை முழுமையாக சுற்றிப்பார்க்க சுமார் 2 மணி நேரமாகுமாம். கொரோனா காரணமாக காட்சி சாலையை திறப்பதற்கு நீண்ட காலம் ஆனாலும் தற்போது பார்வையாளர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *