Share on Social Media

இந்தக் கட்டாய ஹால்மார்க்கிங் மூலம், குறைந்த தரத்திலான தங்க விற்பனையை நிறுத்துவதோடு, நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும். இந்த விதிமுறை, குறைந்த தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களைக்கூட ஏமாறாமல் பாதுகாக்கும்.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் உள்ள 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்களில் சுமார் 34,647 நகைக்கடைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, அடுத்த 2 மாதங்களில் ஒரு லட்சம் நகை தயாரித்து விற்பவர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட கலைப்பொருள்கள் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்கப்பட்டால், அந்த நகைக் கடை உரிமையாளருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. ஆண்டுக்கு 800 டன் அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யும் தங்கம் பெரும்பாலும் நகை உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அதனால், ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு நகை வாங்குபவர்கள் பி.ஐ.எஸ் ஹால்மார்க் தர முத்திரை, கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்” என்றார் தெளிவாக.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *