Share on Social Media


நடந்தது என்ன என்று இயக்குநர் மணிகண்டனிடம் பேசினோம். “இளையராஜா ஆபீஸிலிருந்து இதுபற்றி பேசினார்கள். ‘நாங்கள் இதுமாதிரி எந்த ஒரு புகாரையும் யூனியனுக்கு அளிக்கவில்லை. நாம் பரஸ்பரம் பேசி இசை அமைப்பதிலிருந்து விலகிக்கொண்டது நமக்குத் தெரியும். அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அப்படியிருக்க இப்படி ஒரு செய்தி எப்படிப் பரவியது’ எனக் கேட்டார்கள்.

'கடைசி விவசாயி' மணிகண்டன்

‘கடைசி விவசாயி’ மணிகண்டன்

‘நானே இப்போதுதான் இதைப்பற்றி கேள்விப்பட்டேன். எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது’ என்றேன். அவர்களும் சரியென்று இது குறித்து விசாரிப்பதாகச் சொல்லிவிட்டார்கள். அதனால் அதற்கு பதில் சொல்வது தேவையில்லாதது என விட்டுவிட்டேன்” என்றார் இயக்குநர்.

ஆக, இளையராஜாவிற்குத் தெரிந்துதான் இசையமைப்பாளர் மாற்றம் நடந்திருக்கிறது என இயக்குநர் மணிகண்டனின் பதில் மூலம் நமக்குத் தெரியவருகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *