Share on Social Media

பஸ் கிளம்பியவுடன் கடைசி நேரத்தில் ஓடி வந்து ஏறும் ஹீரோ போல ஒலிம்பிக் போட்டிக்கு கடைசி வாய்ப்பில் தேர்வாகியிருக்கிறார் கோல்ஃப் வீரரான அனிர்பான் லாகிரி. 33 வயதாகும் இவர் புனேவில் பிறந்தவர். இவருடைய தந்தை மருத்துவர் என்பதால், சிறுவயதிலேயே கோல்ஃப் விளையாட்டு பரிச்சயமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. எட்டு வயதிலிருந்தே கோல்ஃபை முறையாக கற்று படிப்படியாக முன்னேறி ஒலிம்பிக் வாய்ப்பை பெறுமளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

தேசிய அமெச்சூர் சாம்பியன்ஷிப் டைட்டிலை 2006, 2007 என இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வென்றிருக்கிறார். 2006 ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். 2015-ல் மலேசிய ஓப்பன் மற்றும் ஹீரோ இந்தியன் ஓப்பன் இரண்டையும் வென்றிருந்தார். 2016 ஒலிம்பிக் போட்டியில் ஆடுவதற்கும் தகுதிப்பெற்றிருந்தார். அந்த ஒலிம்பிக்கில் 57-வது இடம் பிடித்திருந்தார்.

அனிர்பான் லாகிரி

பிரசிடன்ட்ஸ் கோப்பையில் ஆடுவதற்காக தகுதிப்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். 2018 கோல்ஃப் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு 10-வது இடம் கிடைப்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

ஒலிம்பிக்கிற்கான தரவரிசை பட்டியலில் முதல் 60 இடங்களில் இருப்பவர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற முடியும் என்ற நிலையில், 60 வது இடத்தை பிடித்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றார் அனிர்பான்.

2016 ஒலிம்பிக்கில் தான் சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை என தன் மீதே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் அனிர்பான். இந்த முறை சமீபத்தில் முடிந்த பால்மெட்டோ சாம்பியன்ஷிப்பில் கொஞ்சம் நன்றாக ஆடி 25 ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதனால், கடந்த ரியோ ஒலிம்பிக்கை விட டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் கோல்ஃப் போட்டிகள் ஜுலை 29-ம் தேதி முதல் தொடங்கயிருக்கின்றன.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *