Share on Social Media


கடலுார்; கடலுார் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல், அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அரசு அமல்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கடலுார் மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி 39 ஆக இருந்த கொரோனா தொற்று, தற்போது 200ஐ தாண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது. 26 ஆயிரத்து 914 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்து நேற்று முன்தினம் வரை 314 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் முதல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துமனைகளில் பணிபுரியும், டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்டமாக காவலர்கள், வருவாய்த்துறையினர், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது தினசரி 5 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் தடுப்பூசி திருவிழா துவங்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் 26 குழுக்களாக பிரிந்து, கிராமங்கள் தோறும் சென்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இது தவிர மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 103 ஆரம்ப சுகாதார நிலையம், 9 தனியார் மருத்துவமனைகள் என, 122 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி, கடலுார் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 635 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 97 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 23 ஆயிரத்து 538 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,782 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், 18 முதல் 25 வயது வரை 1,640 பேரும், 25 முதல் 40 வயது வரை 10 ஆயிரத்து 215 பேரும், 40 முதல் 60 வயது வரை 57 ஆயிரத்து 378 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 36 ஆயிரத்து 662 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே வரும் மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *