Share on Social Media


கடலுார் : கடலுார் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தால் தீவாக மாறிய கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இரண்டாம் நாளாக மக்கள் தவிக்கின்றனர்.

தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணையில் இருந்து நிரம்பிய 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணையில் ஷட்டர் பழுதானதால் திருக்கோவிலுார் அணைக்கட்டிற்கு நேரடியாக தண்ணீர் வந்தது.அங்கு ஏற்கனவே நிரம்பியிருந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கனமழையால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடிய நிலையில், ஒரே நேரத்தில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது.கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, சாவடி, ஆல்பேட்டை வழியாக கடலுார் வந்தடைந்தது. வரலாறு காணாத அளவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்ததால், தாழங்குடா பகுதி முகத்துவாரம் வழியாக கடல் உள் வாங்கவில்லை.இதனால், சுற்றியுள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டுஉப்பலவாடி, பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பல கிராமங்கள் தீவாக மாறியுள்ளன.

அதேபோன்று, கடலுார் செம்மண்டலம், குண்டு உப்பலவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்தும், கரையை தாண்டியும் நகர் பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பண்ருட்டியில் துவங்கி கடலுார் வரையுள்ள 100க்கும் மேற்பட்ட நகர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் புகுந்தது.கடலுார் தென்பெண்ணையாற்றில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்து அரசு சார்பில் முன்னறிவிப்பு செய்யாததால், மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தண்ணீரும் சூழ்ந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில், முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 15க்கும் மேற்பட்ட முகாம்களில் 10 ஆயிரம் பேர் வரையில் தங்கியுள்ளனர்.2ம் நாளாக தவிப்புஇரண்டாவது நாளாக நேற்றும் தண்ணீர் வடியாததால், மின்சாரம், குடிநீர் இல்லாமலும் மக்கள் தவிப்பது தொடர்ந்தது. நேற்று முன்தினம் முழுதும் கிராமங்களில் அதிகாரிகள் பார்வையிட வரவில்லை. நேற்று அதிகாலை ஒவ்வொரு பாதிப்பு பகுதிக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

நேற்று காலை தீவாக மாறிய கிராம பகுதிகளுக்கு படகுகள் மூலமும், டிராக்டர்கள் மூலமும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். ஜெனரேட்டர் மூலம் குடிநீர் மோட்டார்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.தப்பியது கடலுார்கடலுார் மாவட்டத்தில் கடந்த 18 ம் தேதி மழை வெளுத்து வாங்கியது. கடலுாரில் மட்டும் 14.2 செ.மீட்டர் பெய்தது. இதனால், கடலுார் வெள்ளக்காடாக மாறிய நிலையில், பல்வேறு நகர் பகுதிகள் தண்ணீர் சூழ்ந்தது.

விவசாய நிலங்களும் மூழ்கின. ஏற்கனவே தொடர் மழை காரணமாக கடலுார் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று முன் தினம் பெருவெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களாக மழை இல்லாததால், கடலுார் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பியுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *