Tamil News Oct20 14 842830836772919 Tamil News Spot
Share on Social Media

சென்னை: தங்கம் விலை 3-வது நாளாக குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. நேற்று முன்தினம் 13-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து  ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.376 குறைந்து ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 3-வது நாளான இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1 குறைந்து  ரூ.4,853-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 3 நாளாக குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *