Share on Social Media


ஆனால் அரசு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவில்லை. ஏற்கெனவே, சஸ்பெண்ட் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், 2019-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி அரசு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததற்காக மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கஃபீல் கான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவுக்குத் தடை விதித்தது. மற்றொரு புறம், கஃபீல் கானின் கவனக்குறைவால்தான் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்ததாக விசாரணைக் கமிட்டி தெரிவித்தது. கஃபீல் கான் மீது கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளை விசாரணை கமிட்டி ரத்து செய்திருந்தது.

டாக்டர் கஃபீல் கான்

டாக்டர் கஃபீல் கான்

மேலும், கஃபீல் கான் தொடர்ந்த வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், `4 ஆண்டுகளாக ஏன் கஃபீல் கானை தொடர்ந்து சஸ்பெண்டில் வைத்திருக்கிறீர்கள்!’ என்று அரசுக்குக் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் விதமாக கஃபீல் கானை மாநில அரசுப் பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறது. அரசின் இந்த உத்தரவு தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் கஃபீல் கான், “அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் நிச்சயம் வழக்கு தொடர்வேன். இதற்கு முன்பு அரசின் 8 விசாரணைகளில் நான் நிரபராதி என்று கூறி விடுவிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

கஃபீல் கானை அரசுப் பணியிலிருந்து நீக்கியிருக்கும் உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கைக்கு, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *