Share on Social Media


கொரோனாவின் மூன்றாவது அலை வருமா என்ற பதற்றம் நீடித்து, ஒரு கட்டத்தில் `கொரோனாவாவது… ஒண்ணாவது’ என்ற அளவுக்கு அதை மக்கள் மறந்தே போகும் நிலை ஆரம்பமானது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கிட்டத்தட்ட மறந்தேபோயிருந்த வேளையில், `வந்துட்டேன்னு சொல்லு…. நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று வந்து நின்றது ஓமிக்ரான் எனும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ். `கவலையளிக்கும் உருமாற்றமாக’ இதை அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓமிக்ரான் இந்தியாவுக்குள் நுழைந்துவிடாதபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அறிவித்திருக்கின்றன ஒன்றிய மற்றும் மாநில அரசுகள்.

வைரஸ் ஏன் அடிக்கடி தன்னை உருமாற்றிக் கொள்கிறது, புதிதாக உருமாறியிருக்கும் ஓமிக்ரான் வைரஸ் எப்படிப்பட்டது, அதன் பரவும் தன்மையும் பாதிப்பும் எப்படியிருக்கும்…. அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

வைரஸ் ஏன் அடிக்கடி உருமாறுகிறது?

எந்த ஒரு வைரஸும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உருமாறிக்கொண்டே இருப்பதுதான் இயல்பு. அப்படி உலகிலுள்ள அனைத்து வைரஸ்களும் தம்மை உருமாற்றிக்கொண்டே இருப்பதால்தான் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி உருமாறுவதால் அந்த வைரஸ் அழியாமலிருப்பதுடன், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவவும் செய்கிறது.

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

கோவிட் வைரஸின் உருமாற்றம் எப்போது நிற்கும்?

கோவிட் வைரஸ் என்றில்லை, எந்த ஒரு வைரஸும் இந்த உலகில் இருக்கும் கடைசிநொடி வரை தன்னை உருமாற்றிக்கொண்டேதான் இருக்கும். அதுதான் அதன் இயல்பு.

வைரஸின் உருமாற்றம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

அது குறிப்பிட்ட அந்த உருமாற்றத்தைப் பொறுத்தது. சிலவகை உருமாற்றங்கள் ஆபத்தில்லாதவை. சில உருமாற்றங்கள் உண்மையில் மோசமானவை. இன்னும் சில இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கலாம். எனவே எந்த வைரஸ், எத்தகைய உருமாற்றம் என்பது தெரியாமல் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது.

இப்போது உருமாற்றமடைந்து பரவத் தொடங்கியிருக்கும் ஓமிக்ரான் வைரஸ் எந்தவகையில் வித்தியாசமானது?

ஓமிக்ரான் வைரஸானது அதிகபட்சமாக உருமாற்றமடைந்த வகையைச் சேர்ந்தது. அதாவது 50க்கும் மேலான உருமாற்றங்களைக் கண்டது இது. இதில் 32 உருமாற்றங்கள் வைரஸின் ஸ்பைக் புரதத்திலும், 10 உருமாற்றங்கள் ரிசப்டார் பைண்டிங் டொமைனிலுமாக முக்கியமான பகுதிகளில் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் கவலைக்குரியதாகவும் இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *