Share on Social Media


ஒமிக்ரான் வேரியன்ட் முதன்முதலில் கண்டறியப்பட்டு, ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரைக்கும் ஒமிக்ரான் பற்றி நமக்கு தெரிந்தவற்றில், மிக முக்கியமானவை இரண்டு.

  1. அதன் அதிவேகப் பரவும் திறன்.

  2. இரண்டு டோஸ் தடுப்பூசிகளால் அல்லது முந்தைய கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட எதிர்ப்புசக்தியைத் தாண்டியும், தொற்று ஏற்படுத்தும் திறன்.

இந்த இரண்டுமே மிகவும் ஆபத்தான விஷயம் என்பதால்தான், உலக நாடுகளை உடனே அலர்ட்டாகச் சொன்னது WHO. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் அலை வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. இந்த அலையின் அறிகுறிகள் இந்தியாவிலும் நேற்று தென்படத் தொடங்கியிருக்கிறது. எனவே, மூன்றாம் அலைக்கான நாள்கள் வெகு தொலைவில் இல்லை!

என்ன நடக்கிறது உலகில்?

  • டிசம்பர் 20 முதல் 26-ம் தேதி வரையிலும் உலகில் 49.9 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இது அதற்கு முந்தைய வாரத்தைவிடவும் 11% அதிகம். இதில் அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 39% வரை பாதிப்புகள் உயர்ந்துள்ளன.

  • இதேபோல, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது கொரோனா. அதாவது, உலகம் முழுக்க மீண்டும் ஒரு அலை தொடங்கியிருக்கிறது.

“டெல்டா, ஒமிக்ரான் ஆகிய இரு வேரியன்ட்களுமே இணைந்து பரவுவதால், உலகம் முழுவதும் கொரோனா உச்சத்தைத் தொட்டு, சுனாமி போல பெரிய அளவில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்” என இதுகுறித்து எச்சரித்திருக்கிறார் WHO-வின் இயக்குநர் டெட்ரோஸ்.

Coronavirus

Coronavirus
AP Illustration



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.