Share on Social Media


உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவடைந்து, ஓட்டுப்பெட்டிகள், சீலிடப்பட்ட அறைகளுக்குள் வைக்கப்பட்டு, ஆயுதம் தாங்கிய போலீசாரால் பாதுகாக்கப்படுகின்றன.காரமடைகாரமடை ஒன்றியத்தில், பெள்ளாதி ஊராட்சியில், 3 வது வார்டு, தேக்கம்பட்டி ஊராட்சியில், 15 வது வார்டு, வெள்ளியங்காடு ஊராட்சியில், 10 வது வார்டு ஆகிய மூன்று வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது.நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, பெள்ளாதி ஊராட்சி வார்டில் ஆண்கள், 412, பெண்கள், 355 வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.

இந்த வார்டில் 77.32 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.தேக்கம்பட்டி ஊராட்சி வார்டில் ஆண்கள், 287, பெண்கள், 304 பேர் ஓட்டு போட்டுள்ளனர். இந்த வார்டில், 87.69 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. வெள்ளியங்காடு ஊராட்சி வார்டு தேர்தலில், 209 ஆண்கள், 202 பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர். இந்த வார்டில், 79.65 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.அனைத்து ஓட்டுப்பெட்டிகளும் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பெட்டிக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அன்னுார் மாவட்ட கவுன்சிலர் 3வது வார்டுக்கான இடைத்தேர்தலில், மொத்தமுள்ள, 59 ஆயிரத்து 240 வாக்காளர்களில், 42 ஆயிரத்து 78 பேர் ஓட்டளித்தனர்.
நேற்று காலை 3:00 மணிக்கு, நுாறு ஓட்டு பெட்டிகளும், பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.இதையடுத்து பிரத்யேக அறையில் நுாறு பெட்டிகள் வைக்கப்பட்டு, காலை 5:00 மணிக்கு வேட்பாளர்கள், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில், தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார் அந்த அறைக்கு சீல் வைத்தார்.உதவி தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை முன்புறம், வராண்டா மற்றும் தரை தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 3 ஷிப்டுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பள்ளி வளாகம் முழுவதும் போலீஸ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கைக்கு, இரண்டு அறைகளில், தலா ஆறு மேசைகள் போடப்பட்டு உள்ளன.ஒரு சுற்றில் 12 ஓட்டுப் பெட்டிகள் வீதம்9 சுற்றுகளில் ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெறும். ஓட்டு எண்ணிக்கைக்கு, 24 அலுவலர்கள் 24 உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாளை காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கவுள்ளது.-நமது நிருபர் குழு-

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *