Share on Social Media

வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளைக் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றே ஜப்பானிய அதிகாரிகள் விரும்புகின்றனர்.

டோக்கியோவில் 376 கோவிட் தொற்றுகளும் ஒரு மரணமும் ஜூன் 20 அன்று பதிவாகியுள்ளது. இது ஒரு வாரத்துக்கு முன் இருந்ததைவிட தொற்றுகளின் எண்ணிக்கையில் 72 அதிகம்,.

மெதுவாக நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் பொதுமக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றே உள்ளூர் ஊடகங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பலர் ஒலிம்பிக் போட்டி நடைபெறாது என்றே நினைக்கிறார்கள்.

மே மாதம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 70 சதவிகித ஜப்பானியர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டாம் என்றே தெரிவித்தனர். ஆனால், ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வதோ, தள்ளிவைப்பதோ ஜப்பானின் கைகளில் இல்லை. இறுதி முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிதான் எடுக்க முடியும் என்றே ஒலிம்பிக் ஒப்பந்தம் சொல்கிறது. ஏற்கெனவே ஒராண்டு தள்ளிப்போடப்பட்டுவிட்டதால், இப்போது எப்பாடுபட்டாவது போட்டிகளை நடத்திவிட நினைக்கிறது ஒலிம்பிக் கமிட்டி. அதனால்தான் பார்வையாளர்களே இல்லையென்றாலும் பரவாயில்லை என்கிற முடிவுக்கு அது வந்துவிட்டது.

ஜப்பானின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 16% மட்டுமே இதுவரை கோவிட்- 19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.

– எஸ்.சங்கீதா

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *