Share on Social Media

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், வரும் ஜூலை 23-ம் தேதி டோக்கியோ நகரில் நடக்கப்போகிறது. ஒலிம்பிக்ஸ் மைதானம் கிட்டத்தட்ட ஒரு போர்க்களம்… திடீர் ஹீரோக்கள் நிறைய பேர் உருவெடுப்பார்கள். பெரிய சாம்பியன்கள் நொறுங்கி மண்ணில் விழுவார்கள். இப்படிப்பட்ட ஹீரோக்கள் சிலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது…

ஒலிம்பிக்கில் ஆக்ரோஷ மோதல் நடப்பது அத்லெடிக்ஸ் எனப்படும் தடகளப் போட்டிகளில்தான். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தப் பிரிவில் அழிக்க முடியாத தடம் பதித்து விட்டுப் போனவர், அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ். இரண்டாம் உலகப் போரில் உலகமே ஹிட்லரை எதிர்த்தது என்றால், அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு தனியாளாக அவரை ஜெயித்தவர் ஜெஸ்ஸி.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

அது நடந்தது 1936-ம் ஆண்டு. ‘பெர்லின்’ ஒலிம்பிக்ஸ்! ஹிட்லர் தனது ‘நாஜிக்களின் மேன்மை’ தியரியை உலகம் முழுக்கப் பரப்பிக்கொண்டிருந்த நேரம்… வாகாக அமைந்தது ஒலிம்பிக்ஸ். “வெள்ளைத் தோலும், நீலக் கண்களும் கொண்டவர்கள் மேலானவர்கள். இரண்டாம்தரக் குடிமக்களான கறுப்பர்களால் வெள்ளையர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது” என்று கர்ஜித்தபடி பெர்லின் ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகளைச் செய்தார் ஹிட்லர். அமெரிக்காவிலிருந்து போன ஆஃப்ரோ அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ், ஹிட்லரின் கண்ணெதிரே பல வெள்ளை வீரர்களைத் தோற்கடித்து, அடுத்தடுத்து நான்கு தங்கப் பதக்கங்களை ஜெயித்து, ஹிட்லரை முகம் சிவக்க வைத்தார்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *