Share on Social Media

ஒலிம்பிக்ஸில் எல்லாப் போட்டிகளையும் நடத்துவது ஒலிம்பிக் கமிட்டிதான் என்றாலும்கூட, ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக இருக்கும் அமைப்புகள் தனியாக கண்ட்ரோல் செய்யும்.

சர்வதேசத் துப்பாக்கிச் சுடுவோர் சங்கம், முழுக்க முழுக்க ஆண்களால் நிர்வகிக்கப்படும் அமைப்பு. இந்த அமைப்பு, இந்தப் போட்டிக்குப் பிறகு இந்தப் பிரிவில் பெண்கள் பங்கேற்கத் தடை விதித்துவிட்டது. இதனால், 96-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் ஜாங் ஷான் பங்கேற்க முடியவில்லை. தன் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் வாய்ப்பின்றிப் போனது.

கனடாவைச் சேர்ந்தவர் சூஸன் நட்ராஸ். இவரும் இந்தப் பிரிவில் பலமுறை பங்கேற்றவர். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தனியாளாக அவர் பெரும் போராட்டம் நடத்தினார்.

ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச துப்பாக்கிச் சுடுவோர் சங்கம் என எல்லா இடங்களிலும் போய்ப் பேசினார். ‘இந்தப் பிரிவில் பெண்களுக்குத் தனியாக ஒரு போட்டி உருவாக்க வேண்டும்’ என வற்புறுத்தினார்.

‘கலப்புப் போட்டியாக இருந்தபோதே நான்கைந்து பெண்கள்தான் வருவார்கள். பெண்கள் இதற்கெல்லாம் லாயக்கற்றவர்கள்’ என்று எல்லா கமிட்டிகளும் நிராகரித்தபோது, ஜாங் ஷான் பெற்ற வெற்றியைத்தான் உதாரணமாகக் காட்டினார் சூஸன்.

பல்வேறு நாட்டுத் தலைவர்களின் ஆதரவையும் சூஸன் நாட, 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்ஸில் பெண்களுக்குத் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஜாங் ஷான், சூஸன் இருவருமே அந்தப் போட்டியில் வெற்றிப் பெருமிதத்தோடு பங்கேற்றனர்.

இடையில், ஒலிம்பிக்ஸ் இல்லாமல் வெளியில் நடந்த பல்வேறு உலக சாம்பியன் போட்டிகளில் வென்று சாம்பியனான ஜாங் ஷான் ஒலிம்பிக்ஸில் சொதப்பிவிட்டார்! இந்த முறை அவரால் எட்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது (சூஸனும் ஜெயிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்!). புதிதாக நிறையப் பெண்கள் வந்துவிட்டார்கள்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *