Share on Social Media

அபாரமான உடல்பலம், தன்னம்பிக்கை, கடினமான மன உறுதி எல்லாமும் இருந்தால்தான் இதில் ஜெயிக்கமுடியும். பஞ்சமும் வறுமையும் வாட்டி வதைக்கும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே இதில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவருவது வாழ்வின் விநோதங்களில் ஒன்று.

பிகிலா பிறந்த 1932 ஆகஸ்ட் 7-ம் தேதியில்தான் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. எத்தியோப்பியாவில் ஜாடோ என்ற குக்கிராமத்தில் ஆடு மேய்ப்பதும், பார்ட் டைமாகப் படிப்பதும்தான் அந்தப் பகுதி சிறுவர்களின் வழக்கம். பிகிலாவும் அதையே செய்தார்.

பெரியவனானதும் ராணுவ வீரனானார். ஒருநாள் தலைநகர் அடிஸ் அபாபா வந்தார். அங்கே ஒரு மைதானத்தில் பெரிய கும்பல். உள்ளே விளையாட்டு வீரர்கள் எல்லோரும் ஒரேமாதிரி அழகாக பனியன் போட்டிருந்தனர். பனியனில் ‘எத்தியோப்பியா’ என்று எழுதியிருந்தது. விசாரித்தார். “இவர்கள் எல்லோரும் உலகத்திலேயே மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள மெல்போர்ன் போகிறார்கள்” என்று பதில் கிடைத்தது.

அந்த வீரர்களின் அணிவகுப்பும் கலர் பனியன்களும் கம்பீரமும் பிகிலாவின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அப்போது அவருக்கு வயது 24.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *