Share on Social Media

டோக்கியோ: ஒலிம்பிக் வகை கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் டாக்டர் எச்சரித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ல் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனாவால்  ஒத்திவைக்கப்பட்டது. தடைகளை தகர்த்து டோக்கியோ ஒலிம்பிக்கை வரும் ஜூலை 23–ஆக.8ல் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், கொரோனா நான்காவது அலையில் தற்போது ஜப்பான் சிக்கி தவிக்கிறது. இரண்டாவது பெரிய நகரான ஒசாகாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இப்படி நிலைமை மோசமாக இருந்தாலும் ஒலிம்பிக்கை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதற்கு ஜப்பான் டாக்டர் சங்கத்தின் தலைவர் நவோட்டா உயாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,‘‘ஜூலையில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது ஆபத்தானது. ஜப்பான் மக்கள், மருத்துவ பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 200 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் டோக்கியோ வருவர். பல்வேறு நாடுகளை சேர்ந்த உருமாறிய கொரோனா வகை எல்லாம் டோக்கியோவில் ஒன்று கூட வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக புதிய கொரோனா  வகை உருவாகலாம். இதற்கு டோக்கியோ ஒலிம்பிக் கொரோனா என பெயரிடப்படலாம். இது பெரிய சோகத்தை ஏற்படுத்தும். 100 ஆண்டுகளுக்கு விமர்சிக்கப்படும். ஒலிம்பிக்கை ரத்து செய்வது தான் நல்லது,’’என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *