Share on Social Media

டோக்கியோ: கொரோனா காரணமாக போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் அவர்களாகவே பதக்கங்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஜப்பானின் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டி வரும் 23 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் உட்பட 228 பேர் பங்கேற்க செல்கின்றனர். மொத்தம் 85 பதக்க போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

ஒட்டு மொத்தமாக 339 பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன. வெற்றியாளர்களுக்கு வழக்கமாக பிரபலங்கள் வந்து பதக்கம் வழங்குவர். சமீபத்திய யூரோ கால்பந்து தொடரில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் அலெக்சாண்டர் செப்ரின், அனைத்து வீரர்களுக்கும் தனித்தனியாக பதக்கத்தை கழுத்தில் அணிவித்தார்.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறுகையில்,‘‘பதக்கங்கள் வீரர், வீராங்கனைகள் கழுத்தில் அணிவிக்கப்பட மாட்டாது. மேடைக்கு முன் பதக்கங்கள் கொண்டு வரப்படும். அவர்களாக எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். தவிர பதக்கம் கொண்டு வருபவர், தொற்று ஏற்படாத ‘கிளவ்ஸ்’ அணிந்திருப்பார். வேறு யாரும் பதக்கங்களை கையாண்டிருக்க மாட்டர் என்பதால் பாதிப்பு ஏற்படாது,’’ என்றார்.

வாழ்த்து பாடல்

ஒலிம்பிக்கில் இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக இருக்கும் படி ‘ஒற்றுமை, நம்பிக்கையை’ வலியுறுத்தும் வகையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகி அனன்யா இணைந்து வாழ்த்து பாடல் தயார் செய்தனர். இதை மத்திய விளையாட்ட அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று முறைப்படி வெளியிட்டார்.

 

8000

ஒலிம்பிக் துவங்க இன்னும் 8 நாட்களே உள்ளன. உலகின் பல பகுதிகளில் இருந்தும் டோக்கியோவுக்கு ஜூலை 1–13ல் 8000 விளையாட்டு நட்சத்திரங்கள் வந்துள்ளனர். இவர்களிடம் நடந்த சோதனையில் 3 பேருக்கு கொரோனா இருப்பது தெரிந்தது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 

கொரோனா மையமான ஓட்டல்

தென் மேற்கு டோக்கியோவில் ஹமாமட்சு சிட்டி ஓட்டல் உள்ளது. இங்கு பிரேசில் நட்சத்திரங்கள் 31 பேர் தங்கியுள்ளனர். இங்கு நடந்த சோதனையில் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரியவந்தது. இருப்பினும் பிரேசில் வீரர், வீராங்கனைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

* தவிர டோக்கியோ செல்லவிருந்த அகதிகள் அணியினரிடம் நடந்த சோதனையில் அணி நிர்வாகி ஒருவருக்கு கொரோனா உறுதியானது.

பேரரசர் வருகை

டோக்கியோ ஒலிம்பிக்கை ஜப்பான் பேரரசர் நாருஹிடோ முறைப்படி துவக்கி வைக்கவுள்ளார். போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பேரரசர் குடும்பத்தினர் யாரும் வரமாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *