Share on Social Media

ஜாக்ரெப்: ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஆனந்த்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய துப்பாக்கிசுடும் நட்சத்திரங்கள் குரோஷியாவில் தங்கியுள்ளனர். இங்குள்ள இந்திய துாதரகத்தில் இவர்களுக்கு விருந்து தரப்பட்டது. இதனிடையே கு ரோஷியாவில் நாளை துவங்கவுள்ள சர்வதேச செஸ் தொடரில் பங்கேற்க ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் ஆனந்த் சென்றுள்ளார்.

இவருக்கும் சிறப்பு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த், இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய ரைபிள் சங்கம் வெளியிட் ‘டுவிட்டர்’ செய்தியில்,‘இந்திய துாதரகம் சார்பில் வழங்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியில், 64 கட்டங்களில் அரசன் (‘கிங்’) பங்கேற்று, இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரங்களை ஊக்குவித்தார். சாம்பியனுக்கு நன்றி,’ என தெரிவித்துள்ளது.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *