Share on Social Media

புதுடில்லி: ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் நேத்ரா, விஷ்ணு, கணபதி, வருண் என நான்கு நட்சத்திரங்கள் முதன் முறையாக தகுதி பெற்றனர்.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி (ஜூலை 23–ஆக. 8) நடக்கவுள்ளது. இதற்கான பாய்மர படகு (‘செய்லிங்’) ஆசிய பிரிவு தகுதிச்சுற்று ஓமனில் நடந்தது. இதில் அசத்திய சென்னையை சேர்ந்த நேத்ரா 22, இந்தியாவில் இருந்து இப்போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை ஆனார்.

நேற்று நடந்த பதக்க போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வேலுாரை சேர்ந்த இந்திய வீரர் விஷ்ணு சரவணன், 53 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். இரட்டையரில் சென்னையை சேர்ந்த கணபதி, வருண் ஜோடி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.

முதன் முறை

இதையடுத்து, முதன் முறையாக ஒலிம்பிக்கில் (டோக்கியோ) இந்தியா சார்பில் நேத்ரா, விஷ்ணு, கணபதி, வருண் என நான்கு நட்சத்திரங்கள், பாய்மர படகு போட்டியின் மூன்று பிரிவில் பங்கேற்கின்றனர். இதற்கு முன் நான்கு ஒலிம்பிக்கில், ஏதாவது ஒரு பிரிவில் இருவர் மட்டும் பங்கேற்றனர்.

ழு நட்சத்திரங்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி (வாள் சண்டை), அஜந்தா சரத்கமல், சத்தியன் (டேபிள் டென்னிஸ்), நேத்ரா, விஷ்ணு, கணபதி, வருண் (பாய்மர படகு) என ஏழு பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழக அரசின் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கான உதவித் தொகை, பதக்கங்கள் வெல்வதற்கான ஊக்கத் தொகை திட்டப்படி, ஆண்டுக்கு ரூ. 25 லட்சம், ரூ. 10 லட்சம் பெறுகின்றனர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *