Share on Social Media

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியா சார்பில் 100 விளையாட்டு நட்சத்திரங்கள் செல்லவுள்ளனர். 

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23–ஆக. 8ல் நடக்கவுள்ளது. இன்னும் 49 நாட்கள் உள்ள நிலையில் இதுவரை 56 வீரர்கள், 44 வீராங்கனைகள் என 100 பேர் தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 25–35 பேர் தகுதி பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கான சீருடையை மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, நேற்று அறிமுகம் செய்தார். 

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா கூறுகையில்,‘‘ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் உள்ளன. இதனால் இந்தியா சார்பில் 125 முதல் 135 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். தவிர பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என மொத்தம் 190 பேர் டோக்கியோ செல்வர்,’’ என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *