Share on Social Media

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் மனதில் பட்ட அரசியல் கருத்துக்களை தெரிவிக்க அனுமதி தரப்பட்டது.

பொதுவாக விளையாட்டில் அரசியல் அனுமதிக்கப்படாது. சில நேரங்களில் வீரர், வீராங்கனைகள் புதிய முறைகளில் தங்கள் எதிர்ப்பை காண்பிப்பர். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதன் படி போட்டி துவங்கும் முன், முடிந்த பிறகு தங்கள் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கலாம். மைதானத்தில் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்க அனுமதி தரப்படுகிறது. 

அதேநேரம் இந்த கருத்துக்கள் எந்த ஒரு நபர், நாட்டினை நேரடியாக தாக்கும் வகையில் இருக்கக் கூடாது. இருப்பினும் போட்டிகளின் போது, பதக்கம் வழங்கும் விழாவின் போது எவ்வித அரசியல் பேசவும் தடை தொடரும்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *