Share on Social Media


புதுடில்லி: கோவின் இணையதளத்தின் சர்வதேச கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, ‛இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுவதாகவும், ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை பலருக்கு உணர்த்தியுள்ளதாகவும்,’ பேசியுள்ளார்.

இந்தியாவில் தொடங்கப்பட்ட கோவின் இணையதளம் கொரோனா தகவல்கள், பரவல் கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி இயக்கம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கான தளமாக விளங்கி வருகிறது. இந்த தளத்தின் பயன்பாட்டை உலக நாடுகளுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா மற்றும் உகாண்டா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் கோவின் இணையதளத்தை கொரோனா தொடர்பான பதிவுகளுக்கான பொதுத்தளமாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், கோவின் குளோபல் மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து உலகெங்கிலும் கோவின் இணையதளத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி, சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதள பயன்பாடு உலகத்திற்காக திறக்கப்படுகிறது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, இந்த போரில் உலகளாவிய சமூகத்துடன் நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்ததாகும். ஒவ்வொரு டோசும் கண்காணிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

latest tamil news

உலகம் முழுவதும், கோவிட் தொற்றால் உயிரிழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையிலான தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாடும், அந்த நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இது போன்ற ஒரு சவாலை தனிமையில் தீர்க்க முடியாது என்பதை இந்த அனுபவம் வெளிகாட்டியுள்ளது.

இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை பலருக்கு உணர்த்தியுள்ளது. பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசியே. துவக்கத்தில் இருந்தே, எங்கள் தடுப்பூசி மூலோபாயத்தைத் திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியாவில் முடிவு செய்தோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *