Share on Social Media

பொதுவாக ஒருவருக்குக் கொரோனா பெருந்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இதன் முடிவுகள் வருவதற்கு ஓரிரு நாள்கள் ஆகும். ஆனால் ஒருவரது மூச்சுக் காற்றை வைத்தே அவருக்குக் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை ஒரு நிமிடத்தில் கண்டறிந்துவிடலாம் என்று சொல்கிற சிங்கப்பூர் அரசு, இந்தப் பரிசோதனை முறைக்கு தற்காலிகமாக அனுமதியையும் அளித்துள்ளது. சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘பிரத்தானிக்ஸ்’ (Breathonix) என்கிற நிறுவனம் இந்தப் பரிசோதனைக்கான கருவியைக் கண்டறிந்துள்ளது.

இந்தக் கருவி மூலம் குறிப்பிட்ட அளவிலான மக்களிடம் நடத்தப்பட்ட கொரோனா சார்ந்த மூச்சுப் பரிசோதனையில் 90%க்கும் அதிகமான துல்லிய முடிவுகள் கிடைத்ததாக `பிரத்தானிக்ஸ்’ நிறுவனம் சென்ற வருடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அரசு அளித்துள்ள இந்தத் தற்காலிக அனுமதியை அந்நாட்டின் சுகாதாரத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமும் உறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட தற்காலிக அனுமதியைப் பெற்றுள்ள முதல் நிறுவனம் என்கிற அடையாளமும் `பிரத்தானிக்ஸ்’க்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி… ஒரே நிமிடத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கண்டறியும் கருவி குறித்து இப்போது பார்க்கலாம். இந்தக் கருவியில், ஒரு முறை பயன்படுத்திவிட்டு பின்னர் தூக்கி எரியும் வண்ணம் டிஸ்போஸபள் ஊதுகுழல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *