Share on Social Media


தெலுங்கில் அப்படியொரு கதையை பிடித்திருக்கிறார்கள். 1970-களில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஷ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் அது. இந்தக் கதையை வம்சி கிருஷ்ணா எனும் இயக்குநர் சில வருடங்களுக்கு முன்னதாக, பெல்லம்கொண்டா சுரேஷிடம் சொல்லி, அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பல காரணங்களால் அந்தப் படம் ஆரம்பமாக தாமதமானது. அதனால், அந்த தயாரிப்பாளரிடமிருந்து வெளியே வந்து, ரவி தேஜாவிடம் சொல்லி ஓகே செய்துவிட்டார். தற்போது கையிலிருக்கும் இரண்டு படங்களை முடித்துவிட்டு, இந்தப் படத்திற்கு வரவிருக்கிறார், நடிகர் ரவி தேஜா. இப்படம் ‘டைகர் நாகேஷ்வர ராவ்’ என்ற பெயரில் பேன் இந்தியா படமாக பல மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு மதி என ஸ்ட்ராங்கான டெக்னிக்கல் டீமோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

'டைகர் நாகேஷ்வர ராவ்'

‘டைகர் நாகேஷ்வர ராவ்’

இன்னொரு புறம், அறிமுக இயக்குநர் கே.எஸ் என்றவரை வைத்துக்கொண்டு டைகர் நாகேஷ்வர ராவின் பயோபிக்கை பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். ‘ஸ்டூவர்ட்புரம் தொங்கா’ என பெயரிடப்பட்டிருக்கும் இதில் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கிறார். ஒரே சமயத்தில் ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை இரண்டு படக்குழு போட்டிப்போட்டு தயாரித்து வருகிறது. அதில் ரவி தேஜாவை இயக்கும் படக்குழு அந்தப் படத்திற்கு நாகஷ்வர ராவ் குடும்பத்திடம் பேசி அதற்கான ஒப்புதலும் தடையில்லா சான்றிதழும் பெற்றுவிட்டார்கள் என்கிறார்கள். ஏற்கெனவே, ‘ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற பெயரில் சிரஞ்சீவி படமொன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *