Share on Social Media


வேளச்சேரி–ஒரு வாரமாக, வேளச்சேரி பிரதான சாலை மூடியே வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், போக்குவரத்து துறைக்கு, தினசரி லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கிண்டியில் இருந்து, காந்தசாலை, தண்டீஸ்வரம் வழியாக, விஜயநகர் நோக்கி செல்லும், வேளச்சேரி பிரதான தார்ச்சாலை, 60 அடி அகலம் உடையது. இச்சாலையில் நீளத்தில் 85 சதவீதம் மழை நீர் வடிகால் வசதி இல்லை.மேலும், வேளச்சேரி மின் வாரிய அலுவலகம் மற்றும் காவல் நிலையத்திற்கு இடைப்பட்ட 250 அடி நீளப் பகுதி, தாழ்வாக உள்ளதால், சாலை மிகவும் மோசமாக உள்ளது.நீரோட்டம் கணக்கிட்டு சாலையை சீரமைக்காதது, வடிகால் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், பள்ளம் ஏற்படுவதாக பகுதிமக்கள் கூறினர். அடிக்கடி சேதமடைவதால், 150 அடி நீளத்திற்கு சிமென்ட் சாலை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.பருவ மழை துவங்கும் முன், சாலை, வடிகால் பணியை நிறுத்த மாநகராட்சி உத்தரவிட்டது.

இதை கருத்தில் கொள்ளாமல், 4ம் தேதி இரவு, சாலையின் ஒரு பாதியில், 100 அடி நீளம், அரை அடி உயரத்தில் சிமென்ட் சாலை போடப்பட்டது.பருவ மழை, 6ம் தேதி இரவு பொழிய துவங்கியதால், சாலை போடும் பணி நிறுத்தி சாலை மூடப்பட்டது. புதிதாக போடப்பட்ட சிமென்ட் சாலையும் நாசமானது.மாநகர பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும், விரைவு சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், பேருந்திற்காக காந்திசாலை, தண்டீஸ்வரம் சுற்றுவட்டார மக்கள், 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது.இது ஒருபுறமிருக்க, திருவான்மியூர், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதியில் இருந்து புறப்படும் மாநகர பேருந்துகள், வேளச்சேரி ரயில் நிலையம் வழியாக சுற்றி, மீண்டும் விரைவு சாலை வழியாக செல்கிறது.இதனால், 1.5 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது. பொதுமக்களுக்கும் இதே நிலை தான். இதனால், எரிபொருள் செலவு அதிகரித்து, கூடுதல் பண விரையம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.நடவடிக்கை எடுக்கப்படுமா?சாலை பள்ளம், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அப்போதெல்லாம் சாலையை சீரமைக்காமல், பருவ மழைக்கு இரண்டு நாட்களுக்கு முன், சாலையை அவசர கதியில் சீரமைத்தது, அதிகாரிகள் மேல் சந்தேகத்தை வலுக்கிறது.இ

து குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நஷ்டம் எவ்வளவு?வேளச்சேரி வழியாக ‘டி70, எம்70, 3, 570, 119 ஆகிய தடம் எண்ணில், 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஒரு பேருந்து தினமும் ஆறு முதல் 10 முறை, வேளச்சேரி ரயில் நிலையத்தை சுற்றி செல்கிறது.ஒரு முறை, 2 கி.மீ., சுற்ற வேண்டும். தினமும், சராசரியாக 600 முறை சுற்றி செல்கிறது. இதில், 1,200 லிட்டர் டீசல் கூடுதல் செலவாகிறது.

ஒரு லிட்டர் டீசலில், 4 கி.மீ., துாரம் பேருந்து இயக்கப்படும். இதில், 2 லிட்டர் டீசல் விரையம் ஏற்படுகிறது. இந்த வகையில், ஒரு வாரம், 4 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஆகிறது. இதேபோல், பொதுமக்களின் வாகன எரிபொருள் செலவை சேர்த்தால், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *