30c Tamil News Spot
Share on Social Media

2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ம் தேதி, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மத்திய மோடி அரசால் அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மத்திய அரசாங்கம் கொடுத்த சில வாக்குறுதிகளுக்குப் பிறகு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது.

இந்த வரி விதிப்பு முறைக்குக் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், இந்த இலக்கை அடைவது ஒவ்வொரு மாதமும் பெரும் சிரமமாகவே இருந்துவந்தது. கொரோனா நோய் தொற்றினால், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஏழு மாதங்களில் ஜி.எஸ்.டி வரி வசூல் மேலும் பாதிப்பைச் சந்தித்தது.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மைனஸ் 14% மற்றும் மைனஸ் 8 சதவிகிதமாக வரி வருவாய் சரிவடைந்தது. செப்டம்பரில் சற்றே முன்னேறி, 5 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், அக்டோபர் மாத வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த எட்டு மாதங்களில் முதல்முறையாக ஜி.எஸ்.டி வரி வருவாய் அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. அதாவது, கடந்த 2019-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 10% அதிகரித்து, கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,05,155 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.95,379 கோடி ஜிஎஸ்டி வரிவருவாய் வசூலாகி இருந்தது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *