Share on Social Media

Toxic relationship என்றால் உடனே அது ஆண், பெண்ணுக்குத் தரும் பிரச்னையாக மட்டுமே பார்க்கக் கூடாது. நம் பாட்டிக்களுக்கு நடந்ததை வைத்து ஓர் ஆண்தான் ஒரு ரிலேஷன்ஷிப்பை அப்படி மாற்றுகிறான் என நிச்சயம் சொல்ல முடியாது. நாம் இந்தத் தொடரில் பேசும் இந்த ரிலேஷன்ஷிப் பிரச்னைகள் எல்லாமே இப்போதும் இனி வருங்காலத்துக்காகவும்தான். இதில் ஆண் பெண் இருவருமே சம பொறுப்புடையவர்கள். இப்போதே நிறைய ரிலேஷன்ஷிப்பைப் பெண்கள் டாக்ஸிக் ஆக மாற்றிக்கொண்டுதானிருக்கிறார்கள். எனவே இருவருமே இதைப் பொறுப்புடன் அணுக வேண்டும்.

இன்னொரு விஷயம். ஒரே ஒரு சம்பவத்தை வைத்து toxic relationship என முடிவுக்கு வரக்கூடாது. மஞ்சரி -மதன் விஷயத்திலும் மீன் சாப்பிட்டது ஒரு சம்பவம். அதை வைத்து மதன் தொடர்ச்சியாகப் பிரச்னை செய்த பின்னர்தான் மஞ்சரிக்கு அந்த உறவு கசந்தது.

ரிலேஷன்ஷிப்

ரிலேஷன்ஷிப்
Pixabay

ஒருவருக்கு தங்கள் உறவு இப்படி டாக்ஸிக் ஆக மாறுகிறது எனத் தோன்றினால் அவர் செய்ய வேண்டியது பேசுவதுதான். பிரச்னையில் யார் விக்டிமோ அவர் முதலில் பேச வேண்டும். தன்னை எது பாதிக்கிறதென பார்ட்னரிடம் சொல்ல வேண்டும். அவர் அதைத் தெரியாமல் கூட செய்யலாம். அதை புரிய வைக்க வேண்டும். புரிந்துகொண்டாலும் அவரை அவர் மாற்றிக் கொள்ள காலம் தர வேண்டும். தோழியிடம் சொல்லும் முன் மஞ்சரி மதனிடம் பேசியிருக்கலாம். மதன் தன் தவறை உணர்ந்தால், அவனை அவன் மாற்றிக்கொள்ள மஞ்சரி டைம் தர வேண்டும். ஒரே நாளில் மாறுவது எல்லாம் சாத்தியமில்லை. ஒருவேளை மதன் தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டுவிட்டால், நிச்சயம் மஞ்சரி மதனை இழக்கக்கூடாது. இழந்தால், அவளுக்குத்தான் நட்டம். ஆனால், அதன் பின்னரும் மதன் அப்படியே நடந்தால் என்ன செய்வது?

வேறு வழியில்லை. பிரிவதுதான் நல்லது. பிரேக் அப் கொடுமையானதுதான். வலிதான். ஆனால், சில சமயம் பிரேக் அப் தான் ஒருவரை மீட்கும் வழி. ரிலேஷன்ஷிப் வாழ்வின் ஓர் அங்கம்தான். அதையே வாழ்க்கையென நினைத்து தேவையான சமயத்தில் கூட பிரேக் அப் செய்யாமல் போனால், வாழ்க்கையே போய்விடும்.

அப்படியென்றால், பிரேக் அப் நல்லதா? அதைச் செய்ய சரியான நேரம் எது? பிரேக் அப் செய்தால் பார்ட்னர் என்ன ஆவார்? அவருக்கு வலிக்காமல் எப்படிச் சொல்வது?

அடுத்த வாரம் பார்க்கலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *