Share on Social Media

ஒரு சி.டி ஸ்கேன் 300-400 எக்ஸ்ரேக்களுக்குச் சமம் என்பதும், பிற்காலத்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முழுக்க முழுக்க தவறானது. கதிர்வீச்சைப் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துகள் 30-40 ஆண்டுகளுக்கு முந்தையை நிலை. நவீன சி.டி ஸ்கேன் கருவிகளில் மிக மிகக் குறைந்த அளவிலேயே கதிர்வீச்சு வெளியாகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 5-10 எக்ஸ்-ரேக்களுக்குச் சமம் எனலாம்.

CT Scan

CT Scan
Photo by MART PRODUCTION from Pexels

புற்றுநோயைப் பற்றி அவர் கூறியிருக்கும் கருத்தும் ஆபத்தானது. ஒரு முறை சி.டி ஸ்கேன் எடுக்கும்போது வெளியாகும் கதிர்வீச்சானது ஓராண்டுக் காலத்தில் ஒரு மனிதன் புறச்சூழலில் வெளிப்படும் கதிர்வீச்சின் அளவுக்குச் சமமானது மட்டுமே.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நோய் இருப்பதை உறுதி செய்ய உதவுகிறது என்றால் அதன் தீவிரத்தைக் கண்டறிய சி.டி ஸ்கேன் தேவைப்படும். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தவர்களுக்கு சி.டி ஸ்கேன் மூலம் நோயைக் கண்டறிய முடிகிறது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்குத் தாமதமாகும் நிலையில் சி.டி ஸ்கேன் பரிசோதனையின் மூலம் நோயைக் கண்டறிந்து சீக்கிரமாகவே சிகிச்சையைத் தொடங்க முடிகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *