Share on Social Media


புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை நேரில் சந்தித்து எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேற்று அளித்தார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2003ம் ஆண்டு மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறித்து 237.63 லட்சம் டன்கள் ஒன்றிய அரசினால் அனுப்பப்பட வேண்டிய நிலையில், ஆண்டு ஒன்றுக்கு 171.10 லட்சம் டன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் சந்திரபிலாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே, இதற்கான ஒப்பந்த காலத்தினை நீட்டித்து தர வேண்டும். மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தில் மானிய தொகையை ரூ.12,000 கோடியாக உயர்த்தி தர வேண்டும். ஒன்றிய அரசின் மின் விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஏழு பைசாவில் இருந்து, ஒரு பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்திட வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த கோரிக்கைகளளை விரைவாக பரிசீலனை செய்வதாக ஒன்றிய அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மின்வாரிய  தலைவர் ராஜேஷ் லகானி உடனிருந்தார். பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், ‘திமுக.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாதம் தோறும் மின்கட்டனம் எனும் முறையை அறிவித்தபடி அமல்படுத்துவார். ஊழல் பணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள ஒரே அரசியல்வாதி தங்கமணி மட்டும் தான். ,’ என்று கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.