Share on Social Media


துரைப்பாக்கம்-ஓ.எம்.ஆர்., ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில், ஒரு கோடி ரூபாயில் பூங்கா அமைக்கும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது.

சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஒக்கியம் துரைப்பாக்கம், ‘கிண்டி இன்ஜினியரிங்’ நகரில், 6 தெருக்கள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதே பகுதியில், 14 ஆயிரத்து, 500 சதுர அடி பரப்பளவு, திறந்தவெளி இடம் உள்ளது. இதில், பூங்கா அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, மாநகராட்சி, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில், பூந்தோட்டம், விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, அலங்கார விளக்குகள், யோகா மேடை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளுடன் பூங்கா அமைய உள்ளது.தற்போது, மண் சமப்படுத்தி, மூன்று திசைகளில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதை தொடர்ந்து, பூங்கா பணி நடைபெறும். ஆறு மாதத்தில், அனைத்து பணிகளையும் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *