Share on Social Media

இரு சக்கர வாகனங்களுக்கு பாலிசி எடுப்பவர்களில் பலரும் தொடர்ந்து அதை புதுப்பிப்பது இல்லை. இந்தியாவில் சுமார் 75% பேர் இரு சக்கர வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பதாகவும், நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக உள்ளது எனவும் ஐ.ஆர்.டி.ஏ-வின் சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதே போல, முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிட்டே கொரோனா காலகட்டதில் மருத்துவ காப்பீடு அதிகரித்து இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. ஆனால், எதார்தத்தில் மருத்துவக் காப்பீடு சொற்ப மக்களையே சென்றடைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் 81% மக்களும், கிராமப் புறங்களில் 86% மக்களும் எந்தவித மருத்துவக் காப்பீடுகளையும் கொண்டிருக்கவில்லை என்கிறது புள்ளிவிவரம்.

இன்ஷூரன்ஸ்

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாகவும், குறைவான விழிப்புணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் கிராமப்புறங்களின் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த `மாடல் இன்ஷூரன்ஸ் வில்லேஜ்’ திட்டத்தை கொண்டுவர ஐ.ஆர்.டி.ஏ முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள 500 கிராமங்களை தேர்ந்தெடுத்து அந்த கிராமங்களை ஒராண்டுக்குள் மாதிரி காப்பீட்டு கிராமங்களாக மாற்ற ஐ.ஆர்.டி.ஏ முடிவு செய்துள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இன்னும் 500 கிராமங்களை தேர்வு செய்து அதையும் மாதிரி காப்பீட்டு கிராமங்களாக மாற்ற ஐ.ஆர்.டி.ஏ இலக்கு நிர்ணயித்துள்ளது.

CC 5 Tamil News Spot
Insurance

Also Read: உலகின் மதிப்புமிக்க டாப் 100 இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியல்… LIC-க்கு 10-வது இடம்!

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அந்தந்த கிராமங்களிலுள்ள அனைத்து மக்களுக்குமான இன்ஷூரன்ஸ் தேவையை பூர்த்து செய்ய முடியும். அங்குள்ளவர்களின் சொத்து மீதான இன்ஷூரன்ஸ், இயந்திரங்கள் மிதான இன்ஷூரன்ஸ், வாகன இன்ஷூரன்ஸ், ஆயுள் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என ஐ.ஆர்.டி.ஏ நம்புகிறது.

கிராம மக்களை இன்ஷூரன்ஸ் எடுக்க வைப்பதை மட்டும் இந்த `மாடல் இன்ஷூரன்ஸ் வில்லேஜ்’ திட்டம் நோக்கமாக கொண்டிருக்காது. இன்ஷூரன்ஸ் என்றால் என்ன, எதற்காக இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும், அதன் பயன்கள் என்ன, எந்த இன்ஷூரன்ஸ் யாருக்கு ஏற்றது போன்ற இன்ஷூரன்ஸ் குறித்த அறியாமையை போக்குவதும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும் என ஐ.ஆர்.டி.ஏ அமைப்பு தெரிவித்துள்ளது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *