Share on Social Media

பெண்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படுவது இந்தத் தொடரின் சிறப்பம்சமாக இருக்கிறது.

லண்டன் ஸ்பிரிட் சார்பில் இயான் மோர்கன்

லண்டன் ஸ்பிரிட் சார்பில் இயான் மோர்கன்
TheHundred.com

14 சீசன்களாக ஆண்களுக்கு தொடரை நடத்திவிட்டு, பெண்களுக்கு ஒரு முழு சீசனை கூட நடத்த மனமில்லாமல் இருக்கும் போர்டுகளுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

விதிமுறைகளிலும் இந்த ஃபார்மட்டுக்கேற்ப சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரு அணிகளும் தலா 100 பந்துகளை ஆடப்போகின்றன.

ஓவருக்கு 6 பந்துகள் என்கிற கணக்கு இங்கே கிடையாது. அதற்கு பதில் ‘Five’ என்றழைக்கப்படும். அதாவது, ஓவருக்கு 5 பந்துகள். ஒரு பௌலர் 5 பந்துகளை வீசி முடித்த பிறகு நடுவர் ஒரு வெள்ளை கார்டை எடுத்து காண்பிப்பார். கேப்டன் விருப்பப்பட்டால் அதே பௌலர் தொடர்ச்சியாக மேலும் 5 பந்துகளை வீசிக்கொள்ளலாம். ஒரு பௌலர் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 20 பந்துகளை மட்டுமே வீச முடியும்.

பேட்டிங் ஆடும் அணிக்கு முதல் 25 பந்துகள் பவர்ப்ளே. அந்த சமயத்தில் வட்டத்திற்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க முடியும். இது வழக்கமான விஷயமே.

குறிப்பிட்ட நேரத்தை தாண்டி ஒரு அணி பந்துவீசுகிறதென்றால், அந்த எக்ஸ்ட்ரா நேரத்தில் அவுட் ஃபீல்டில் இருக்கும் ஒரு ஃபீல்டரை 30 யார்டு வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும்.

போட்டி டை ஆகும்பட்சத்தில் சூப்பர் 5 கடைப்பிடிக்கப்படும்.

தமிழ்ப் படத்தில் சிவா மரு வைத்து மாறுவேடம் போடுவது டி20 யின் விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை செய்து ‘The Hundred’ விதிமுறைகளாக வெளியிட்டுள்ளனர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *