சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
தற்போது சூர்யா குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். அவர் மீண்டும் இந்தியா திரும்பியதும் பாலா இயக்கவுள்ள படத்துக்கான தேதிகளை ஒதுக்குவார் என்று தெரிகிறது.
#ET coming to you in 5 languages
Get ready anbana fans!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO @thangadurai123 #EtharkkumThunindhavan #ఈటి #ಈಟಿ #ഇറ്റി #ईटी pic.twitter.com/sikc7aa4yG
— Sun Pictures (@sunpictures) December 13, 2021