Share on Social Media


புதுடில்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், தேர்தல் கமிஷன் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தியது.

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், அடுத்த ஆண்டு மார்ச்சிலும், உத்தர பிரதேசத்தில் மே மாதமும், ஐந்தாண்டு ஆட்சி காலம் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான முன் ஏற்பாடுகள் குறித்து, ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர்.

latest tamil news

ஓட்டு சாவடியில் குறைந்தபட்ச வசதிகளை உறுதி செய்வது, ஓட்டுப்பதிவு நடைமுறையை எளிமையாக்குவது, மின்னணு ஓட்டு இயந்திரம், ஓட்டு உறுதி சீட்டு இயந்திரம், தபால் ஓட்டு பெறுவதற்கான வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், கொரோனா தடுப்பு பணி, தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை களப் பணிகளை துவக்குமாறு, தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *