Share on Social Media


கோல்கட்டா : கொரோனா இரண்டாவது அலை பரவ தேர்தல் கமிஷன் தான் காரணம் என சென்னை ஐகோர்ட் சாடியதை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

கரூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், அரசியல் கட்சிகள் சமூக இடைவெளியின்றி இஷ்டம் போல் பிரசாரம் செய்ததை தடுக்காமல் விட்டு, கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என ஐகோர்ட் நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கடுமையாக சாடினார். இதனை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து கோல்கட்டாவில் நடந்த கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மம்தா பேசியதாவது: சென்னை ஐகோர்ட் கருத்தை நான் வரவேற்கிறேன். தனது தவறிலிருந்து தேர்தல் கமிஷன் தப்பிக்க முடியாது. கொரோனா பரவலுக்கு பிரதமர் மோடியும், தேர்தல் கமிஷனும் தான் காரணம். ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தல் கமிஷனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

கொரோனா பாதித்த மாநிலங்களில் முகாமிட்டுள்ள 2 லட்சம் மத்திய படை வீரர்களை தயவுசெய்து வாபஸ் பெறுங்கள். பள்ளிகள், கல்லூரிகளில் தங்கியுள்ள இவர்களில், 75 சதவீதம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் கடைசிக் கட்டத் தேர்தலுக்காவது மத்தியப் படைகளை வாபஸ் பெறுங்கள். பா.ஜ.,வின் லாபத்துக்காக இங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. காயமடைந்த காலைக் கொண்டு 50 நாட்கள் நான் பிரசாரம் செய்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *