Share on Social Media

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,443க்கும் சவரன் ரூ.35,544க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4 நாளாக சற்று குறைந்து காணப்பட்டது. இந்த வருடம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தேவை குறைவாக இருந்தாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படவே இல்லை. மாறாக அதன் மீதான மோகமே அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களில் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 4 நாட்களாக மகிழ்ச்சி தரும் விதமாக விலை குறைக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு தொழில்துறையில் தேக்கம் ஏற்படவில்லை.

அச்சம் மட்டுமே நிலவியதால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்தது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருகிறது. சமீப காலமாக இறங்கு முகத்தில் இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.296 உயர்ந்திருப்பது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருகின்ற காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரக்கூடும் என்பதால் நகை வாங்க மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது நகை பிரியர்களை வருத்தமடைய செய்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,280க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,410-க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து 72.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *