Share on Social Media

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64  உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,655க்கும், சவரன் ரூ.37,240க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 சரிவை கண்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,635 க்கும், சவரன் ரூரூ.37,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.77.60க்கு விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் சரிவில் இருந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்திருப்பது நகை பிரியர்களை கழகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருடம் தொடக்கம் முதலே தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் விலை சரிவதும், மறுநாளே ஏறுமுகத்தை சந்திப்பதும் தங்கத்தின் வேலையாக இருந்தது. 

தங்கம் வாங்கவே வேண்டாம் என்ற மனநிலைக்கு அதன் விலை உயர்வு காணப்பட்டது. இருப்பினும் தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்திருப்பது நகை பிரியர்களை வருத்தமடைய செய்திருக்கிறது. 

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *