Share on Social Media


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணன் மதுரையில் காலமானார்; அவருக்கு வயது 82. இவர், விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யாவின் சகோதரர் ஆவார்.

மனைவியின் மறைவுக்குப் பிறகு, மதுரை ‘தீக்கதிர்’ நாளிதழ் அலுவலகத்திலேயே தங்கி எழுதிவந்த ராமகிருஷ்ணன், கடும் நீரிழிவு நோயின் காரணமாக நேற்று இரவு காலமானார். எழுத்து வருமானத்திலேயே சிரமத்துடன் வாழ்ந்து வந்த இவருக்கு மகனும் மகளும் உள்ளனர்.

கம்யூனிச இயக்க வரலாற்றை அனுபவ ரீதியாக நன்கு அறிந்த வெகு சிலரில் ஒருவரான ராமகிருஷ்ணன், அந்த வரலாற்றை ஆவணப்படுத்துவதைத் தனி மனித இயக்கமாகவே மேற்கொண்டு, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு’ (ஆங்கிலம்), ‘தமிழக கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு’ ஆகிய நூல்களை எழுதினார். இவர் முறைப்படுத்தி வெளியிட்ட ‘பொதும்பு வீரணன் – ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை’ நூல் சமீபத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு

தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25-க்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் ஆகியவை என்.ராமகிருஷ்ணனின் பங்களிப்புகளாகும். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், மாவட்ட வரலாறுகள், தனிநூல்கள் என அவை பரந்து விரிந்திருக்கின்றன. இவர் எழுதிய ‘மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர்: ஒற்றுமையும் முரண்பாடும்’ என்ற நூல் மிக முக்கியமான பங்களிப்பாகும்.

எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான ச.தமிழ்ச்செல்வன், “முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் இளைய சகோதரர் தோழர் என்.ராமகிருஷ்ணன். இவர்களுடைய தந்தை 1920-களில் பெரிய பொறியாளராக விளங்கினார். மிகவும் வசதியான குடும்பம். ஆனால், சகோதரர்கள் இருவரும் கட்சி வாழ்கையைத் தேர்வுசெய்து, எளிய வாழ்க்கைமுறைக்கு வந்துவிட்டார்கள்” என்று அவரது ஆரம்பக் காலம் பற்றிக் கூறுகிறார்.

FGbSGJUVcAEKfZt Tamil News Spot
என்.ராமகிருஷ்ணன்

மேலும் பேசிய தமிழ்ச்செல்வன், “தோழர் என்.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழு அலுவலகச் செயலாளராகத் தில்லியில் பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் பேச எம்.பி-க்களுக்குத் குறிப்புகளைத் தயாரிப்பது உள்ளிட்ட முக்கியப் பணிகளை அவர் அப்போது மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் என நிறைய மொழிபெயர்ப்புகளை அவர் அப்போது மேற்கொண்டார்.

தில்லியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தோழர் ராமகிருஷ்ணன், மதுரையில் தங்கி கட்சியின் வரலாற்றை எழுதத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் கட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் தோன்றி வளர்ந்த வரலாற்றை விரிவாக எழுதினார். தொடர்ந்து, ‘தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு’, ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு’ ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைத் தோழர் ராமகிருஷ்ணன் எழுதினார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை நேரடியாகப் பார்த்த ஒரு தலைமுறையைச் சார்ந்தவர் என்பதால் மனதிலிருந்தே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்.

tamizhaaththil communist iyakkaththin thotramum valarchchiyum FrontImage 620 Tamil News Spot
கம்யூனிஸ்ட் இயக்கம்

அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு வாழ்க்கை வரலாறுகள் எழுதப்படவில்லை. அவர்களைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே பொதுவில் தெரியும். அந்த நிலையை மாற்றி, கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய முன்னோடி தோழர் ராமகிருஷ்ணன். சிபிஎம் முதல் பொலிட் பீரோ உறுப்பினர்கள் 9 பேரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘நவரத்தினங்கள்’ என்ற புத்தகம், இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

எல்லாவற்றையும் திறந்த மனதோடு அணுகிய தோழர் ராமகிருஷ்ணன், ‘மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர்: ஒற்றுமையும் முரண்பாடும்’ என்ற நூலில், மூவருக்கும் இடையிலான ஒற்றுமைகளையும், முரண்பாடுகளையும் கவனப்படுத்தி, இன்று அதில் கருத்தியல் ஒற்றுமைக்கான தேவை குறித்து வலியுறுத்தியிருந்தார்.

Tamil News Spot
மார்க்ஸ் – பெரியார் – அம்பேத்கர்: ஒற்றுமையும் முரண்பாடும்

சமகாலத்தின் முக்கியமான அறிவுஜீவியும், அடுத்த தலைமுறை இளம் கம்யூனிஸ்டுகளுக்கு கட்சியின் வரலாற்றைப் போதித்த ஆசிரியருமான தோழர் ராமகிருஷ்ணனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது!” என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.