Share on Social Media


”படத்தில் நாயக பிம்பம் அதிகமாக இருப்பது குறித்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

” எப்போதுமே ஒரு பிரச்னையை தொடங்குவதற்கு, அதைப்பற்றி பேசுவதற்கு ஒருவர் தேவைப்படுகிறார். புளியங்குளம் எனும் ஊரில் எவ்வளவோ பேர் இருந்தும் அந்த ஊரின் கதையை நான் வந்துதான் சொல்லியிருக்கிறேன். ஒரு மனிதனிடம் இருந்துதான் எல்லாமே தொடங்கும். மக்கள் பிரச்னைகளைப்பார்த்து அதை நெறிப்படுத்துவதற்கு, அதை சரிப்படுத்துவதற்கு, அதை தொடங்கிவைப்பதற்கு ஒரு கல், ஒரு கை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட கையாகத்தான் நான் கர்ணணைப் பார்க்கிறேன்.”

”படத்தில் போலீஸுக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பது சரியா… வன்முறைக்கு வன்முறைதான் தீர்வா?”

” இந்தப் படம் வன்முறைப் படமாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது, இதன் நோக்கம், இதன் ஆன்மா, திசை திருப்பப்பட்டுவிடக்கூடாது என நிறையவே மெனக்கெட்டிருக்கிறேன். எளிய மக்களின் போராட்டத்தை, அவர்களின் வாழ்வியலைத்தான் படமாக எடுத்திருக்கிறேன். இந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், அந்தப்பக்கம் ஆயிரம் குதிரைகள், காலாப்படை, யானைப்படை எனப் போர்புரிந்த ராஜாக்களின் யுத்தங்கள் யுத்தமாகவே இருக்கும்போது, எளிய மக்களின் யுத்தம் மட்டும் எப்படி வன்முறையாகப் பார்க்கப்படுகிறது என்பது புரியவில்லை. நான் எடுக்க நினைத்தது யுத்தப் படம்தான். யுத்தங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எளிய மக்கள், வறண்ட பூமிக்களில் யுத்தத்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணபிரானை, கர்ணன் கொலைசெய்யும்போதுகூட, எப்படி அதைக் காட்சிப்படுத்துவது எனத் தெரியாமல் கஷ்டப்பட்டேன். படத்தில் நேரடியாகக் கர்ணன் ஒரு கொலைதான் செய்வான். அதற்கும் கதறிஅழுவான். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நினைத்து, வாழ்வு நிர்கதியானதை நினைத்து, அனைத்து உயிரினங்களையும் நினைத்து கதறித் துடிப்பான். அந்தக் கொலையை வீரமாக மிகைப்படுத்தி படத்தில் ஒரு காட்சிகூட இருக்காது. என் பயத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் தனுஷ் சார் போக்கிவிட்டார். எனக்கு பெரிய பதற்றம் இருந்தது. இப்படி ஆகிவிடுமோ, இப்படி மாறிவிடுமோ, வேறு மாதிரி புரிந்துகொள்ளப்படுமோ என்கிற என் நிம்மதியின்மையை தன்னுடைய பர்ஃபாமென்ஸால் ஆற்றுப்படுத்தினார் தனுஷ் சார். அப்படியிருந்தும் இன்னும் பயந்து அந்த ஷாட் முடிந்ததும் குழந்தை இன்சர்ட் வைப்பது, கழுதைக்குட்டி இன்சர்ட் வைப்பது என எல்லாமுமே செய்தேன். இவ்வளவு இருந்தும் எளிய மக்களின் போராட்டம் வன்முறையாகத் தெரிகிறது என்றால் நான் இன்னும் நிறைய சினிமா கற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *