Share on Social Media

பொதுத் துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி, தமது வளர்ச்சி அதிகாரிகள் (டெவலப்மென்ட் ஆபீசர்ஸ்) பயன்படுத்தும் வகையில் பிரகதி (PRAGATI – Performance Review Application Growth and Trend Indicator) என்கிற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

எல்.ஐ.சி

Also Read: விரைவில் வெளியாகும் LIC IPO; போட்டி போடும் 16 வியாபார வங்கிகள்; என்ன காரணம்?

இந்தச் செயலியைப் பயன்படுத்தி வளர்ச்சி அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள ஏஜென்டுகளின் செயல்பாட்டினை சுலபமாக கண்காணிக்க மற்றும் கணக்கீடு செய்ய முடியும்.

இதன் மூலம் ஒவ்வொரு ஏஜென்டும் எவ்வளவு ப்ரீமியம் வசூலிக்கின்றனர், அவர்களின் அன்றாட செயல்பாடுகள், வருங்கால என்.டி.ஆர்.டி போன்ற தகவல்களை எளிதில் பெறமுடியும். ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்திகளை மேம்படுத்தவும் திட்டமிடலுக்கும் முடிவுகள் எடுக்கவும் இந்த விவரங்களும் தகவல்களும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

607e667a83b48 Tamil News Spot
எல்.ஐ.சி

Also Read: LIC IPO: ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவைக் குழு; விரைவில் வெளியாகிறது LIC IPO?

டிஜிட்டல் மயமாக்கல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. அவ்வாறு செய்யும் போது தகவல்கள் எளிதாக ஒன்றிணைக்கப்பட்டு விரைவாக வேலை முடிகிறது. தற்போதைய இந்தப் புதிய பிரகதி செயலி எல்.ஐ.சி நிறுவனத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஓர் அங்கமாக இருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *