77680 thumb Tamil News Spot
Share on Social Media

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தொடர்ந்து பங்களித்த டாடா குழுமத்தின் 7,00,000 ஊழியர்களுக்கும் கடிதத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன்.

“வழக்கமாக ஆண்டின் இந்த நேரத்தில் நான் உங்களுக்கு திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பற்றித்தான் விவரிப்பேன். ஆனால் இந்த ஆண்டு நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த ஆண்டு நிறுவனத்தின் மூத்த தலைமைக் குழு எதிர்கொண்ட சவால்களை, உங்களில் பலர் எதிர்கொண்ட தனிப்பட்ட சவால்களுடன் ஒப்பிட முடியாது. தொற்றுநோயின் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால், வலி மற்றும் இழப்பின் தனிப்பட்ட கதைகள் பல உள்ளன. நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்

2020-ம் ஆண்டு மிகப்பெரிய இழப்புகளைக் கொடுத்தபோதும், மக்கள் பலர் அவரவர் வேலைகளை சரியாகச் செய்ததை நான் கண்கூடாகக் கண்டேன். புலம்பெயர்ந்தோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவது முதல், மருத்துவமனைகளை உருவாக்குவது மற்றும் பொது சுகாதாரத் தரவுகளைச் சேகரிப்பது வரை, கோவிட்-19 தொற்றுக்கான சி.ஆர்.எஸ்.பி.ஆர் (CRSPR) பரிசோதனையை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் நமது முயற்சிகள் வரை, ‘ஒன் டாடா’வின் மிகச் சிறந்த செயல்பாட்டைச் செய்திருக்கிறோம். இதற்கான உங்கள் பணி எனக்கு பெருமையளித்ததோடு இந்த குழுவை மேலும் வழிநடத்த என்னைத் தூண்டியது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *