Share on Social Media


2019-ம் ஆண்டு வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில் இந்த கிராமங்கள் இல்லை. சீனா ஒரே வருடத்தில் மட்டும் அருணாசலப்பிரதேச எல்லைப் பகுதியில் நான்கு கிராமங்களைப் புதிதாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “எல்லையில் நடைபெற்றுவரும் செயல்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாகவே இப்படி தான் சட்டவிரோதமான கட்டுமான பணிகளையும், ஆக்கிரமிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறது. சட்டவிரோதமான செயல்களை இந்தியா என்றுமே ஏற்காது. இந்தியா தனது கண்டனத்தைத் தொடர்ந்து பதிவு செய்யும்” என்றும்,

சீனா அத்துமீறல்

சீனா அத்துமீறல்
planet labs inc

“இந்தியா, பாதுகாப்பை வலுப்படுத்தவும், படைகள் துரிதமாகச் செயல்படவும், எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், எல்லைப் பகுதியில் சாலைகள், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளது. இப்போது சீனா புதிதாகக் கட்டியுள்ள கட்டுமானம் சர்வதேச எல்லைக்கு ஆறு கிலோமீட்டர் அருகில் அமைந்துள்ளது. அதேபோல, அங்கு வசிக்கும் மக்கள் யார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *