Share on Social Media


இம்பால்:’மணிப்பூரில், 2017 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர் ஒக்ராம் ஹென்றி சிங்கின் வெற்றி செல்லாது’ என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இரண்டாம் இடம் பிடித்த பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.தகுதி நீக்கம்மணிப்பூரில், முதல்வர் பிரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்துக்கு, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த தேர்தலில், வாங்கேய் சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒக்ராம் ஹென்றி சிங் வெற்றி பெற்றார். பின், அவர் பா.ஜ.,வில் இணைந்தார். இதையடுத்து, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஹென்றி தாக்கல் செய்த வேட்பு மனுவில், பல முக்கிய தகவல்களை அவர் மறைத்துள்ளதாக, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை, கடந்த மாதம் 17ல் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.மனு தாக்கல்நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஒக்ராம் ஹென்றி சிங் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், கல்வி தகுதி, அவர் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை. விதி மீறல்இது, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி மீறலாகும். எனவே, ஹென்றி வெற்றி பெற்றது செல்லாது என, நீதிமன்றம் அறிவிக்கிறது.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்த, பா.ஜ., வேட்பாளர் ஈராபாட் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *