Share on Social Media



சென்னை: சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: கமலும், ரஜினியும் எம்.ஜி.ஆரை பற்றி பேசி, அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கின்றனர்.  முதல்வர் பழனிசாமி தமிழர் தான். ஆனால் அவர் ஆட்சி எங்களுக்கு பிடிக்கவில்லை. அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினியும் கமலையும் அடிக்கிற அடியில் விஜய் உள்பட இனி எந்த நடிகனும் அரசியலுக்கு வரக்கூடாது. நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்துவிடும் என்கிற எண்ணம் மாற வேண்டும்.பிரபாகரன் மீது பற்று கொண்டதால் 100 விழுக்காடு எம்.ஜி.ஆரை மதிக்கிறோம். மற்றப்படி அவர் நல்லாட்சி வழங்கவில்லை, ஆங்கிலக்கல்வி கொண்டு வந்தது, மாநில பட்டியலில் இருந்த கல்வியை தேசிய பட்டியலுக்கு மாற்றியது. எம்.ஜி.ஆர் முல்லை பெரியாறு அணை உரிமையை கேரளாவிற்கு தாரை வார்த்தது உள்ளிட்ட பல கேடுகளை செய்தவர் எம்.ஜி.ஆர். நாம் தமிழர் தனித்துதான் போட்டியிடுகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *