markret Tamil News Spot
Share on Social Media

“அப்படியே பார்த்தாலும் நமது மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கிறார்களே?”

அமைச்சர் கே.பி அன்பழகன்

அமைச்சர் கே.பி அன்பழகன்

“ உண்மைதான். ஆனால், அங்கு போய் படிப்பவர்கள் எல்லாம் யார் என்று பாருங்கள். பணத்தைத் திரட்டக் கூடிய சக்தி உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும், எங்கு குறைவான கல்விக் கட்டணம் இருக்கிறதோ அதைத் தேடிப் போகிறார்கள். உலக மருத்துவச் சந்தையில் கல்வி கோலோச்சுகிறது. இதேபோன்ற போட்டியில் அண்ணா பல்கலைக்கழகமும் இறங்கப் போகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங்கும் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங்கும் தமிழ்வழியில் படிக்க முடியும். இனி அது சாத்தியப்படப் போவதில்லை. அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு இரண்டாகப் பிரித்துவிட்டது. ஒன்று ‘அண்ணா டெக்னிக்கல் ரிசர்ச் யுனிவர்சிட்டி’ என்ற பெயரில் பிரித்து அதற்குள் கிண்டி வளாகம், எம்.ஐ.டி வளாகம், ஏ.சி டெக் ஆகியவற்றை அடக்கிவிட்டனர். ஏ.சி டெக்கில்தான் நான் பி.ஹெச்டி முடித்தேன். அப்போது இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால், அடித்தட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதன்பிறகு நிறைய கல்லூரிகள் திறக்கப்பட்டன. பின்னர், இடஒதுக்கீட்டின் மூலமாக தமிழ்வழியில் படிக்கின்ற மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் வந்தார்கள். அவர்களுக்கு பல்கலைக்கழகம் கல்வி உதவித் தொகையும் வழங்கியது.

அதுவே, ஐ.ஓ.இ டேக் வந்துவிட்டால், முதல் தலைமுறை மாணவர்கள் சேர முடியாது. பல்கலைக்கழகத்துக்குள் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.எஸ்.ஆர்.ஓ, டி.ஆர்.டி.ஓ ஆகியவை தங்களின் ஆய்வுகளுக்காக உபகரணங்களை வாங்கிக் குவித்துள்ளனர். இதற்காக சென்னையின் மையப்பகுதியில் மிகப் பெரிய நிலப்பரப்பும் அதில் உள்ள ஆய்வகம் மற்றும் நூலக வசதிகள் மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கப் போகிறது. இதைவைத்து உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றி அப்படியே கார்ப்பரேட் யுனிவர்சிட்டியாக மாற்றப் போகிறார்கள். இது எப்படி நமது அடித்தட்டு மாணவர்களுக்குப் பயன்படும். இந்தியா முழுவதும் வரக்கூடிய ஐ.ஓ.இ பல்கலைக்கழகங்களான மணிப்பால் பல்கலைக்கழகம், அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகம், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் போட்டி போடப் போகிறது. இந்தப் போட்டி எப்படி இருக்கும் என்றால், பி.எஸ்.என்.எல் சிம் கார்டு, ஜியோவுடன் போட்டி போடுவதற்கு ஒப்பானது.

இதனை ஆட்சியில் உள்ள அ.தி.மு.க அரசு எதிர்க்க வேண்டும். 69 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு ஒத்துக் கொள்வதாக சூரப்பா சொல்கிறார். ஐ.ஐ.டி என்பது மத்திய அரசின் நிறுவனம். அங்கு ஓ.பி.சி பிரிவு உண்டு. அதேநேரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உண்டா? தமிழ்நாட்டில் பி.சி இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. இங்கு அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு உள்ளது. இவையெல்லாம் மத்திய அரசு நிறுவனத்தில் இருக்கிறதா? மாநிலத்தின் உரிமை என்பது கல்வியைத் தீர்மானிப்பது. அதை முழுமையாக பறிக்கக்கூடிய வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. இதை அரசு எதிர்க்காவிட்டால், பெரிய வளாகங்கள் உள்ள நமது கல்வி நிறுவனங்கள் எல்லாம் மத்திய அரசின் கைகளுக்குப் போய்விடும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *